×

அரசு அதிகாரிகளை தேடி சென்ற காலம்போய் மக்களை தேடி செல்லக்கூடிய அரசாக திமுக செயல்படுகிறது: அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு

மதுராந்தகம்: மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வையாவூர் ஊராட்சி மாம்பட்டு கிராமத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு துறை துணை செயலாளர் தினேஷ்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அமுதா ஏழுமலை, எஸ்.ஏழுமலை, மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், வையாவூர் ஊராட்சி தலைவர் காமராஜ், கிளை செயலாளர்கள் கமலக்கண்ணன், ராஜா, வெங்கடேசன், பாபு, சீனிவாசன், மணிகண்டன், தங்கப்பாண்டியன், கோவிந்தன், தியாகராஜன், தணிகாசலம், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் சத்யசாய் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டிகள், புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ”இந்தியாவிலேயே மிகப்பெரிய வரலாற்றுக்கு சொந்தக்காரர் கலைஞர். அண்ணாவிற்கு பிறகு அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து 1969ம் ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உறுதுணையாக இருந்து இந்திய அரசாங்கத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். 1980ல் இந்திரா காந்தியை அரியணையில் அமைத்திய பெருமைக்குரியவர் கலைஞர்” என்றார். இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ”கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து புத்தகங்களும் கலைஞர் நூலகத்துக்கு சென்றால் கிடைக்கும். கலைஞர் உருவாக்கியதை இன்று நிலையாக்கி திராவிட மாடல் ஆட்சியில் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் மருத்துவமனைகளை தேடியும், அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகளை தேடி வரக்கூடிய சூழல்இருந்தது. ஆனால் இப்போது திராவிட மாடல் ஆட்சியில் மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என எதுவாக இருந்தாலும் மக்களை தேடி செல்லக்கூடிய அரசாக திமுக செயல்பட்டு வருகிறது” என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சிவக் குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் யோகா ஆனந்த், ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், தமிழரசன், சித்ரா திருஞான செல்வம், தேவராஜ், மணியன், பார்த்தசாரதி, சுந்தரவரதன், கருங்குழி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சத்யசாய் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post அரசு அதிகாரிகளை தேடி சென்ற காலம்போய் மக்களை தேடி செல்லக்கூடிய அரசாக திமுக செயல்படுகிறது: அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,P. Murthy ,Madhurandakam ,Maduradakam North Union ,general ,Dinakaran ,
× RELATED தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி...