×

சாலமங்கலம் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: சாலமங்கலம் கிராமத்தில் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சியில் 1000க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மின் தேவைக்கு கம்பங்கள் அமைத்து மின் வினியோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், சாலமங்கலம் கிராமத்தில் இருந்து மாகாண்யம் செல்லும் வழியில் அமைக்கபட்டுள்ள 5 மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சேதமடைந்து காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று படப்பை துணை மின் வாரிய அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலமங்கலம் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Salamangalam ,Sriperumbudur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...