×

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் 2ம் நிலை பெண் காவலர்களிடம் குறைகளை டிஐஜி கேட்டறிந்தார்

வேலூர் : வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி ெபறும் 2ம் நிலை பெண் காவலர்களிடம் குறைகளை டிஐஜி ஆனிவிஜயா கேட்டறிந்தார்.தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை காவலர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் கடந்த 1ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 8 பயிற்சி மையங்களில் தொடங்கியது. வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மொத்தம் 284 பெண் காவலர்கள் கடந்த 1ம் தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு 7 மாத பயிற்சியில் கவாத்து பயிற்சி, சட்டங்கள் குறித்த பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் முறை, முதலுதவி பயிற்சி, ேபாலீஸ் நிலையங்களில் எவ்வாறு பணிபுரிவது, குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் முறை, முதலுதவி ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் காவல்துறை பயிற்சி பள்ளி டிஐஜி ஆனிவிஜயா, நேற்று காலை வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சட்ட வகுப்பு குறித்து பயிற்சி காவலர்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் பயிற்சி பெறும் 2ம் நிலை பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆய்வின்போது, காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் முருகன், முதன்மை கவாத்து போதகர் விஜயலட்சுமி, முதன்மை சட்ட போதகர் கனிமொழி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

The post வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் 2ம் நிலை பெண் காவலர்களிடம் குறைகளை டிஐஜி கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : DIG ,Police Training School ,Vellore ,Anivijaya ,Vellore Police Training School ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார்...