×

தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கீழ்வேளூர்,ஏப்.18: தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூ தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூ தட்டுகளை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் எடுத்து வந்த பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24ம் தேதி தீமிதி திருவிழா, 25ம் தேதி செடில் உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழா குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.

Tags : Devur ,Chelamuthu Mariamman temple ,Kilivelur ,Devur Chelamuthu Mariamman Temple ,
× RELATED கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி...