×

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

 

ராசிபுரம், நவ.4: ராசிபுரம் நகராட்சி பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் வட்டாரம், அரியகவுண்டம்பட்டி மற்றும் நாமக்கல் வட்டாரம் முத்தனம்பாளையம் பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் குறித்து, கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ராசிபுரம் நகராட்சியில் 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வாரச்சந்தை, நவீன இறைச்சிக்கூடம், சலவைத்துறை பணிமனை, காமாட்சி தெருவில் குழந்தைகள் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், 2.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள தினசரி சந்தையை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர், 11வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ₹6.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, குடிநீர் இணைப்பு பெறும் குடியிருப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், கமிஷனர் சேகர், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Uma ,Dinakaran ,
× RELATED முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!