×

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் டெங்கு டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழுத்திட வேண்டும் என கூறியுள்ளார். டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்து கொசு உற்பத்திக்கு காரணமான நபர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன. கட்டுமான நிறுவனங்கள், வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வெண்டும் என ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

The post டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Corporation Commissioner ,Radhakrishnan ,Chennai ,
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...