×

இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி

டெல்லி: பெருமுதலாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்த பாஜக ஆட்சி கர்நாடகாவில் அகற்றப்பட்டுள்ளது என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை கர்நாடக மக்கள் தங்கள் தீர்ப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். பாஜக ஏதோ ஒரு மாயையை இன்றைக்கு உருவாக்க முயன்றது. பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்ற மாயையை உருவாக்க முயன்றனர். பாஜக உருவாக்க முயன்ற மாயை இன்று உடைக்கப்பட்டு விட்டது.

பாஜகவின் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாட்டு மக்கள் முதிர்ச்சி பெற்ற தீர்ப்பினை வழங்கத் தொடங்கியுள்ளனர். பாஜகவின் அறுகதையற்ற ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்க காங்கிரஸ் கட்சி இடம் தராது என நம்புகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எழுச்சியுடன் செயல்பட கர்நாடக வெற்றி துணைபுரியும்.

The post இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,General Secretary T. Raja ,Delhi ,T. Raja ,BJP ,Karnataka ,General Secretary ,India ,General Secretary of the ,
× RELATED காந்தியை குறைத்து மதிப்பிட்டு...