×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: விவசாய சங்கங்கள் அழைப்பு

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதேவேளை, போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை சுற்றுயுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: விவசாய சங்கங்கள் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...