×

டெல்லியில் நடுரோட்டில் பெண் சுட்டுக்கொலை

புதுடெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள கோகல்புரி என்ற இடத்தில் நேற்று பிற்பகல் ஹீரா சிங் என்பவர் தனது மனைவி சிம்ரன்ஜீத் கவுர் மற்றும் 12வயது மற்றும் 4 வயது மகன்களுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் சென்ற போது, தகராறு செய்த நபர் அங்கிருந்த மேம்பாலத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சிம்ரன்ஜீத் கவுர் பலியானார்.

The post டெல்லியில் நடுரோட்டில் பெண் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Heera Singh ,Simranjeet Kaur ,Kogalpuri, ,Dinakaran ,
× RELATED வரும் பிப். 1ம் தேதி முதல் அமலுக்கு...