முதல் அரையிறுதியில் சென்னை 31-12 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் டெல்லி 14-7 என்ற புள்ளிக் கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த ஹைதராபாத்தை நசுக்கியது. தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை- டெல்லி அணிகள் மோதின. அதில் அதிரடியாக விளையாடிய சென்னை, எதிரணியான டெல்லியை ஒரு புள்ளி கூட எடுக்க விடவில்லை. ஆட்டத்தின் முடிவில் 41-0 என்ற கணக்கில் அபார வெற்றியை ருசித்த சென்னை, ரக்பி பிரிமீயர் லீக்கின் முதல் சாம்பியன் என்ற சாதனையை படைத்தது.
The post டெல்லியை கதறடித்த சென்னை: எனக்கு 41 உனக்கு 0; ரக்பியில் முதல் சாம்பியன் appeared first on Dinakaran.
