×

டெல்லி வெள்ளம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி : மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவு

டெல்லி: டெல்லி வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தலைநகர் டெல்லியில் மழை ஓய்ந்தாலும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் மீன் பிடிப்பு பகுதிகளில் பெய்து யாரும் கனமழை காரணமாக டெல்லியில் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனையில் 208.62 மீட்டர் அளவுக்கு வெள்ளம் பாய்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வசீராபாத், காஸ்மீரி கேட், ஜி.டி.கர்னல் ரோடு, நீம் கரோலி கவுசாலா, யமுனா பஜார், விஸ்வகர்ம காலனி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

சாலைகள், சுரங்கபாதைகள், குடியிருப்புகள் என திரும்பும் பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிகிறது. பகல் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலையில் போக்குவரத்து சீரானது. ஆனால், சாலைகளே ஆறுகள் போல காட்சியளித்தாலும் வாகனங்களை மாற்று பாதையில் பயணிக்க அறிவுறுத்தியதாலும் நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே பிரான்சில் இருந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி வெள்ளம் குறித்து கேட்டறிந்தார். மீட்பு பணிகளை துரிதகதியில் முடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி மாநகரமே வெள்ளத்தில் மிதப்பதால் கடந்த 5 நாட்களில் மட்டும் 342 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் வேண்டுகோளையும் மீறி ஒன்றிய ஹத்னி குண்டு அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிட அனுமதி அளித்ததால் யமுனையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லி வெள்ளம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி : மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Delhi ,PM Modi ,Union Minister ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…