×

ரூ. 1,000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு வேலை : ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

அரியலூர் : ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்றனர். பொது மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞரின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 130 ஏக்கரில் இந்த சிப்காட் தொழிற்பேட்டை அமைகிறது. ரூ. 1,000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். பின்னர் 11.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப்பேருரை ஆற்றுகிறார்.

The post ரூ. 1,000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு வேலை : ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Jayangondali ,K. Stalin ,Ariyalur ,Chief Minister MLA ,Shipkot Industry ,Jayangondam Mahimaipuram ,Chief Minister ,Ariyalur District ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...