×

தீபிகா படுகோன் ஸ்பெஷல் ரெசிபி – எமா தட்ஷி

தேவையானவை:

1 – 1/2 தக்காளி நீளமாக வெட்டப் பட்டது,
1 வெங்காயம் நீளமாக நறுக்கியது,
1/2 பச்சை மிளகாய் நீளமாக வெட்டப்பட்டது,
3-4 சிவப்பு மிளகாய் நீளமாக வெட்டப்பட்டது,
4-5 பச்சை மிளகாய் கீறல்,
4-5 பூண்டு பொடியாக நறுக்கியயது,
1 டேபிள்ஸ்பூன் உப்பு,
1 டேபிள்ஸ்பூன் கருப்பு மிளகுத்தூள்,
1 டீஸ்பூன் எண்ணெய்,
1 கப் தண்ணீர்,
3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்,
1 கப் சீஸ் துருவியது.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் உற்றி பச்சை மிளகாய் கீறல் மற்றும் பூண்டு துண்டுகளை சேர்த்து வதக்கவும், உடன் வெங்காயம், சிவப்பு மிளகாய், சேர்த்து வதக்கி, உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உடன் மிளகுத்தூள் சேர்த்து, சீஸ் துருவல், சிறிது வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். சீஸ் மற்றும் வதங்கிய கலவை ஒன்றிணைந்து வருகையில் தீயை அணைத்து சூடான சாதத்துடன் பரிமாறவும். இதில் சிக்கன், காய்கறிகள் என எதுவும் வேக வைத்து சேர்த்துக்கொள்ள சுவை இன்னும் கூடும்.

The post தீபிகா படுகோன் ஸ்பெஷல் ரெசிபி – எமா தட்ஷி appeared first on Dinakaran.

Tags : Emma Tadshi ,Emma Tatshi ,
× RELATED சத்துமாவு கேக்