×

உ.பி.யில் இருந்து வரத்து குறைவு பூண்டு விலை அதிகரிப்பு

சென்னை: உ.பி.யில் இருந்து வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், உ.பி., அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு கொண்டுவரப்படுகிறது. தற்போது இப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு பூண்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தினசரி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 8 அல்லது 10 வாகனங்களில் பூண்டுகள் வருகிறது. ஒரு லாரியில் 25 டன் பூண்டுகள் வருகின்றன.

இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக நேற்று காலை 3 அல்லது 6 வாகனங்களில் மார்க்கெட்டுக்கு பூண்டுகள் வந்துள்ளதால் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இல்லதரிசிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.650க்கு என அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ.100 லிருந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதம் ரூ.200லிருந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி மாதம் ரூ.300ல் இருந்து ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரூ.500 விரை விற்பனை செய்யப்படுகிறது. உடனடியாக பூண்டு விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். தமிழ்நாடு விவசாயிகளின் சங்க பேரவை மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன் கூறும்போது, ‘‘விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பூண்டின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் விளைச்சல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பூண்டு குறைந்து உள்ளது. இதன்காரணமாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. இன்னும் 20 நாட்களில் படிப்படியாக பூண்டின் விலை குறையும்’’ என்றார்.

The post உ.பி.யில் இருந்து வரத்து குறைவு பூண்டு விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,CHENNAI ,Coimbatore ,Koyambedu ,Madhya Pradesh ,Ariyana ,Rajasthan ,Gujarat ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உ.பி.மாநிலம் ஹத்ராஸில் சத்சங்...