×

ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஒரு வாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 

டெல்லி: ஆளுநர் வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அப்படி முடிவு எடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி, உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு ஜனாதிபதி மூலமாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட குறித்து ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஒரு வாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணை ஆகஸ்டு 2 ம் வாரத்தில் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

The post ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஒரு வாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Governor ,R. N. Ravi ,of ,Tamil ,Nadu ,
× RELATED ‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி...