×

பாம்பன் குந்துகால் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலோரத்தில் இரண்டு நாட்களாக மீன்கள் செத்து கரை ஒதுங்குகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், பாம்பன் கடலோரப்பகுதியில் காற்றினால் கரை ஒதுங்கும் கடல் பாசிகளுடன் செத்த மீன்களும் கரை ஒதுங்கி வருகின்றன. பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் செத்து அழுகிய நிலையில் மீன்கள் கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கடல் அலையினால் இழுத்து வரப்படும் கடற்பாசிகளுடன் மீன்களும் கரை ஒதுங்குவதால் இது எதனால் என்று புரியாமல் மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடல் சீதோஷ்ண நிலையினால் மீன்கள் செத்து கரை ஒதுங்குகிறதா அல்லது வலையில் அதிகளவில் சிக்கிய மீன்களை படகில் ஏற்றி வரும் போது படகின் பாதுகாப்பு கருதி மீனவர்களால் கடலில் கொட்டப்பட்ட மீன்களா என்று தெரியாமல் மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் மீன்கள் செத்து கரை ஒதுங்குவது குறித்து கடல் மீன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பாம்பன் குந்துகால் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Bomban ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...