×

பெரியபாளையம் அருகே சேதமடைந்து காணப்படும் காவல் உதவி மையம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சேதமடைந்து காணப்படும் காவல் உதவி மையத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 30க்கும் மேற்பட்ட போலிசார் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சென்னை, ஆவடி பகுதிகளில் இருந்து வடமதுரை கூட்டுசாலை வழியாகத்தான் வருவார்கள்.

எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வடமதுரை கூட்டுச்சாலை பகுதியில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரை கூட்டுசாலையில் காவல் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு எஸ்ஐ உட்பட 3 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

ஆடித்திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பது மற்றும் இரவு நேரங்களில் மணல் கடத்தலை தடுப்பது போன்ற பணிகளுக்காக இந்த காவல் உதவி மையம் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த காவல் உதவி மையத்திற்குள் அடிக்கடி மழைநீர் புகுந்துவிடுகிறது. அந்த நேரத்தில் காவலர்கள் வெளியே நிற்க வேண்டியுள்ளது. எனவே சேதமடைந்துள்ள காவல் உதவி மையத்தை அகற்றிவிட்டு புதிதாக சிமென்ட் தளம் போட்ட கான்கிரீட் கட்டிடத்தில் காவல் உதவி மையம் அமைய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே சேதமடைந்து காணப்படும் காவல் உதவி மையம்: புதிதாக கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Damaged police support center ,Periyapalayam ,Oothukottai ,Police Help Center ,Damaged Police Help Center ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம், திருக்கண்டலம் அரசு...