×

‘மோக்கா’ புயல் பாதிப்பால் மியான்மரில் 81 பேர் பலி

மியான்மர்: வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் மியான்மரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது. ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கர் கிராமங்களில் மட்டும் 41 பேர் பலியாகினர். இந்தப் பகுதியில் ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 81-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். மேலும் மோக்கா புயலால் மியான்மரில் ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வங்கதேசத்தில் அதிகமாக அகதிகள் தங்கியிருக்கும் காக்ஸ் பஜாரில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ‘மோக்கா’ புயல் பாதிப்பால் மியான்மரில் 81 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Cyclone 'Mokha ,Mokha ,northern Indian Ocean ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்