×

2014 முதல் 2023 வரை ரூ.14.5 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி: கனிமொழி எம்பி கேள்விக்கு மக்களவையில் அமைச்சர் பதில்

புதுடெல்லி: கனிமொழி எம்.பி. மக்களவையில் எழுத்துபூர்வமான சில கேள்விகளை எழுப்பினார். “ 2014 முதல் தள்ளுபடி(ரிட்டர்ன் ஆஃப்) செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள், ஆண்டு வாரியாக என்ன? அதன் பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்கள் விவரங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துபூர்வமாக பதிலளிக்கையில், 2014-15 ஆம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 18 ஆயிரத்து 178 கோடி. இதே நிதியாண்டில் மொத்த தள்ளுபடி கடன் தொகை 58 ஆயிரத்து 786 கோடி ரூபாய்.

2015-16 நிதியாண்டில் மொத்தம் 70 ஆயிரத்து 413 கோடி ரூபாய், 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 373 கோடி ரூபாய், 2017-18 நிதியாண்டில் 1,61,328 கோடி ரூபாய், 2018-19 நிதியாண்டில் 2,36,265 கோடி ரூபாய், 2019-20 நிதியாண்டில் 2,34,170 கோடி ரூபாய், 2020-21 நிதியாண்டில் 2,02,781 கோடி ரூபாய், 2021-22 நிதியாண்டில் 1,74,966 கோடி ரூபாய், 2022-23 நிதியாண்டில் 2,09, 144 கோடி ரூபாய் தள்ளுபடி(ரிட்டர்ன் ஆஃப்) செய்யப்பட்ட கடன் தொகைகளாகும்.

ஆக மொத்தம் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி( செய்யப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனங்ககளுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ஆகும். வர்த்தக வங்கிகள் 2014 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 668 கோடி ரூபாய் மதிப்புக்கு தள்ளுபடி கடன்களை மீட்டுள்ளது ” என்று பதிலளித்துள்ளார்.

The post 2014 முதல் 2023 வரை ரூ.14.5 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி: கனிமொழி எம்பி கேள்விக்கு மக்களவையில் அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Lok Sabha ,New Delhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED அனல் பறக்கும் அரசியல் சூழலுக்கு...