×

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்: ரூ.150 முதல் ரூ.250 வரை கட்டணம் நிர்ணயம்

தென்காசி: குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதையடுத்து படகு சவாரி நேற்று தொடங்கியது. குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் அம்சமாக படகு சவாரி திகழ்கிறது. இயற்கை எழில், குறைந்த ஆழம், சிறிய அளவிலான குளம் ஆகியவற்றின் காரணமாக பலரும் குடும்பத்துடன் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இந்தாண்டு கடந்த மே 15ம் தேதி முதல் அருவிகளில் தண்ணீர் விழுந்த போதும் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக படகு குழாம் நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை படகு சவாரி துவங்கியது. படகு குழாமை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திறந்து வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். படகு குழாமில் மொத்தம் 31 படகுகள் உள்ளது. இவற்றில் 2 இருக்கை மிதி படகுகள் 6 ம், 4 இருக்கை மிதி படகுகள் 16ம், 4 இருக்கை துடுப்பு படகுகள் 5 ம், தனிநபர் ஹயாக் வகை படகுகள் 4 ம் அடங்கும். கடந்தாண்டை போலவே அரை மணி நேர சவாரிக்கு 2 இருக்கை படகுகளுக்கு ரூ.150ம், 4 இருக்கை படகுகளுக்கு ரூ.200ம், 4 இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.250ம், ஹயாக் வகை படகுகளுக்கு ரூ.150ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்டுகளும் புதிதாக வரவழைக்கப்பட்டு உள்ளது.

The post குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்: ரூ.150 முதல் ரூ.250 வரை கட்டணம் நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Courtalam ,Tenkasi ,Koortalam Aindaruvi Vennamadai boathouse ,Dinakaran ,
× RELATED தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2...