×

சோளம் ஸ்டப்ட் போண்டா

தேவையானவை:

சோள மணிகள் – 2 கப்
உளுந்தம்பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சோளமணிகளையும் தனியாக ஆவியில் வேக வைத்து ஆறவிடவும். பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, தேங்காய்த் துருவலுடன் கலந்து அரைத்து, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து உளுந்த மாவில் தோய்த்து வாணலியில் சூடாக்கிய எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான போண்டா தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

The post சோளம் ஸ்டப்ட் போண்டா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சோயா சங்க்ஸ் பக்கோடா