×

சட்டீஸ்கரில் காங்கிரஸ் ‘நம்பிக்கை யாத்திரை’


ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் அங்கு நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, சட்டீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காந்தி பிறந்த நாளான இன்று ஒரு நாள் ‘பரோஷா யாத்ரா’ (நம்பிக்கை யாத்திரை) நடத்தப்பட உள்ளது. முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ உள்ளிட்ட காங்கிரசார் யாத்திரையில் பங்கேற்று, நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் செல்கிறார்கள். அப்போது பாஜவின் துரோகங்களை மக்களிடம் கூறி பிரச்சாரம் செய்வார்கள் என்று சட்டீஸ்கர் செய்திதொடர்பு பிரிவு தலைவர் சுஷீல் ஆனந்த் சுக்லா தெரிவித்துள்ளார்.

The post சட்டீஸ்கரில் காங்கிரஸ் ‘நம்பிக்கை யாத்திரை’ appeared first on Dinakaran.

Tags : Congress ,Sattiskar ,Raipur ,Chief Minister ,Pupesh Bagel ,Chhattiesgarh ,Chuttiesgarh ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து...