×

ராஜஸ்தானை குற்றவாளிகள் கையில் ஒப்படைத்த காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘காங்கிரசின் மாபெரும் தீய அடையாளங்களாக ஊழல், தகுதியற்றவர்களுக்கு பதவி, வாக்கு வங்கி அரசியல் ஆகியவை உள்ளன. அவை இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற தடைகளாக உள்ளன. காங். ஆட்சியாளர்கள் ராஜஸ்தானை கொள்ளையர்கள், கலவரக்காரர்கள், குற்றவாளிகள் கையில் ஒப்படைத்துள்ளதால் பொதுமக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று ராஜஸ்தானில் உள்ள குழந்தைகள் கூட கெலாட் ஜி, உங்களுக்கு ஓட்டு கிடையாது என்று கூறுகிறார்கள். காங். மந்திரிகள் சமூக விரோத சக்திகளால் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வேடிக்கை பார்க்கிறார்கள். பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

 

The post ராஜஸ்தானை குற்றவாளிகள் கையில் ஒப்படைத்த காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan ,Modi ,Jaipur ,Baran district ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து...