×

காங்கிரஸ் உறுதி ம.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பாஜ ஆளும் மத்தியப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பந்தல்கண்ட் உள்ள சாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பரிந்துரைத்த பந்தல்கண்ட் திட்டத்தை பாஜ அரசு செயல்படுத்தவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி எதையுமே செய்யவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டுமே பிரதமர் மோடிக்கு ரவி தாஸ் நினைவுக்கு வருகிறார். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தலித்துக்களின் மக்கள் தொகை 1.13கோடியாகும். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.

The post காங்கிரஸ் உறுதி ம.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Bhopal ,Mallikarjuna Kharge ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!