×

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியது ஏன்..? மோடியை கண்டித்து காங்கிரஸ் பேரணி: நாடு முழுவதும் நடக்கிறது

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மோடி அரசு நிறுத்தியது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டது குறித்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின்னர் ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா ஆகியோர் கூறும்போது,’ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பா.ஜ அரசியலாக்குகிறது. போர் நிறுத்த நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி நடக்கிறது. ஒன்றிய அரசிடம் இருந்து பதில்களைக் கோரி பல்வேறு மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த்’ பேரணிகள் நடத்தப்படும்’ என்றனர்.

The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியது ஏன்..? மோடியை கண்டித்து காங்கிரஸ் பேரணி: நாடு முழுவதும் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Operation Chintour ,Congress ,Modi ,New Delhi ,Modi government ,Congress party ,Rahul Gandhi ,US ,President ,Trump ,Jairam Ramesh ,Bhavan Kera ,
× RELATED மசோதாக்களின் பெயர்களை ஹிந்தியில்...