×

கார் மோதியதில் கம்யூனிஸ்ட் நிர்வாகி படுகாயம்

 

நத்தம், ஏப்.27: நத்தம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் படுகாயமடைந்தார். நத்தம் அருகே பண்ணியாமலையை சேர்ந்தவர் சின்னக்கருப்பன்(40). நத்தம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் தனது டூவீலரில் கட்சி வேலையாக குட்டுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். குமரபட்டி-புதூர் பகுதியில் பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு கையில் முறிவும், காலில் பலத்த காயமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மோதியதில் கம்யூனிஸ்ட் நிர்வாகி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Natham ,Marxist Communist Party ,Natham.… ,Dinakaran ,
× RELATED சுவாச பிரச்சனை காரணமாக மார்க்சிஸ்ட்...