×

தலைமை செயலக காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: சென்னை தலைமை செயலக காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடல் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு ெதாடங்கி வைத்தார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டு பகுதியில், விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினர் ரமணிக்கு வேண்டுகோள் வைத்ததிருந்தனர்.

அதன்படி, தலைமைச் செயலக காலனி ஏ.கே.சாமி நகர் 1வது தெருவில் சேதமடைந்து காணப்படும் விளையாட்டு திடலை சீரமைத்து, அங்கு மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கப்பட்டு கைப்பந்து, கபடி, செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, 75வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தலைமை செயலக காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chief Secretariat Colony ,Perambur ,Shekhar Babu ,Chennai ,
× RELATED பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க...