×

கல்லூரி பஸ் மோதி இருவர் பரிதாப பலி

துரைப்பாக்கம்: கேளம்பாக்கத்தில் இருந்து ராஜிவ்காந்தி சாலை வழியாக நேற்று மாணவர்களை ஏற்றி வந்த கல்லூரி பேருந்து, செம்மஞ்சேரி சிக்னல் அருகே வந்தபோது, எதிர் திசையில் விதிமீறி வந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த இருவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த சோழிங்கநல்லூர் போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, இருவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து, உயிரிழந்த இருவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கல்லூரி பஸ் மோதி இருவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Kelambakkam ,Rajiv Gandhi Road ,Semmancheri ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை