×

கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி: பாமாயில் இறக்குமதியை தடைசெய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை

தேனி: கொப்பரை தேங்காய்க்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக தேங்காய் விலை சரிவடைந்து தேங்காய்க்கு ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து கொப்பரை தேங்காய் விலையை அதிகரிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ.17 முதல் ரூ.18 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை சரிந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி: பாமாயில் இறக்குமதியை தடைசெய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : copra ,Dinakaran ,
× RELATED 17 டன் கொப்பரை ₹21 லட்சத்திற்கு ஏலம்