×

தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இலவச லேப்டாப், டேப்: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் டேப்களை மேயர் பிரியா வழங்கினார். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் சுமீத் நிறுவனத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்விக்கு உதவிடும் வகையில் அந்நிறுவனத்தின் சார்பில் ‘கல்வி பாலம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 12ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் 5 மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் (டேப்), 10ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களுக்கு 2 கையடக்கக் கணினிகளையும் (டேப்) வழங்கும் நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மேயர் பிரியா தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிஷ்யா பள்ளி மாணவியர் எழுதிய, ‘டெவலப்பிங் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தை மேயர் பிரியா வெளியிட்டார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், தலைமைப் பொறியாளர் என்.மகேசன், உர்பேசர் சுமீத் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூத் சைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இலவச லேப்டாப், டேப்: மேயர் பிரியா வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,CHENNAI ,Chennai Corporation ,Chennai Corporation… ,Dinakaran ,
× RELATED சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான...