×

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சியில் உள்ளோர் சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5% போனஸ்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால், ஊக்கத் தொகை பெறலாம். சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை செலுத்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள் மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சியில் உள்ளோர் சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்தினால் 5% போனஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Govt. ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...