×

சிட்ரான் சி3 ஏர்கிராஸ்

சிட்ரான் இந்தியா நிறுவனம், சி3 ஏர் கிராஸ் என்ற புதிய எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே உள்ள சி3 காரை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டுளளது. சி3 வரிசையில் 3வது கார் இது. சி3 ஹேட்ச்பேக்கை விட சற்று நீளமாக இந்த கார் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் ஹெட்லாம்ப், மோனோடோன் மற்றும் டூயல் டோன், முன்புற கிரில் மீது இரட்டை அடுக்கு குரோம் வடிவமைப்பு, 17 அங்குல டூயல் டோன் அலாய் வீல் என தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறுகிறது.

இது அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதுபோல் ஷோரூம் விலை வேரியண்ட்களுக்கு ஏற்ப ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கார் குறித்த விவரங்கள் வெளியாகியிருந்தாலும், நடப்பு ஆண்டின் இரண்டாம் அரையாண்டில்தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சிட்ரான் சி3 ஏர்கிராஸ் appeared first on Dinakaran.

Tags : Citroen ,Citroen India ,Dinakaran ,
× RELATED தயாரிப்பு முறையில் பல்வேறு...