×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம்: அமைச்சர் உதயநிதி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோல சிஏஏ சட்டம் நுழைய முடியாது எனவும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் பாஸிட்டுகளை இம்முறை மக்கள் தூக்கி எறிவார்கள் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.

அடிமைகளின் உதவியோடு கொண்டு வரப்பட்ட மானுட விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று நம் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Union ,Minister ,Udayanidhi ,CHENNAI ,Udayanidhistal ,Union Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி