×

மாசு ஏற்படுத்தும் மரத்துகள்கள் தொழிற்சாலையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை: அதிகாரிகள் சமரசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில், தனியார் பிளைவுட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து, மரத் துகள்கள் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து, உணவு மற்றும் உடைகளில் படிந்ததால் பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பிதான் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சின்ன ஒபுளாபுரம் கிராமத்தை ஒட்டி சரண் பிளைவுட் என்ற தனியார் பிளைவுட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பகல், இரவு நேரங்களில் கருப்புத் துகள்களும் மரத்துகள்களும் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை அரசு அதிகாரிகள் மேற்கண்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாக்கி வந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி அளவில் சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள் சமைப்பதற்காக சமையல் செய்துள்ளனர். அப்போது, அதிக மரத்துகள்களை சரண் பிளைவுட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிவதால் அந்த துகள்கள் அனைத்தும் உணவுகளில் படிந்தும் மற்றும் சுவாசிக்கும் போது இருமல் வயிற்றுப்போக்கு பல்வேறு நிகழ்வுகளுக்குள்ளாகினர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சரண் பிளைவுட் தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.

இது குறித்து கேள்விப்பட்டதும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் தினந்தோறும் மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து உம்மி துகள்களும், கருப்பு துகள்களும் வெளியேறி புற்றுநோய் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனை தொழிற்சாலை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என கூறினர். இது சம்பந்தமாக அதிகாரிகள் மாசுக்காட்டுப்பாட்டு வரியா அதிகாரிகளை வரவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post மாசு ஏற்படுத்தும் மரத்துகள்கள் தொழிற்சாலையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Chinna Obulapuram ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு