×

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே.. சீனாவில் கற்றல் திறன் குறையாது இருக்க செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கட்டுப்பாடு..

பெய்ஜிங் : சீனாவில் கற்றல் திறன் குறையாது இருக்க செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை செல்போன் கட்டுப்பாட்டு அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 16 மணி நேரமும் 16 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் 2 மணி நேரம் மட்டுமே செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல இரவில் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பை ஸ்மார்ட் போன்களில் இணைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்றும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ மட்டுமே காட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான பழக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் கிடைக்காதிருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

The post ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே.. சீனாவில் கற்றல் திறன் குறையாது இருக்க செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கட்டுப்பாடு.. appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு