×
Saravana Stores

சீன நிலக்கரி நிறுவனத்தில் தீ விபத்தில் 26 பேர் பலி

பீஜிங்: சீன நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஷான்ங்ஸி மாகாணம் லிஷி மாவட்டம்,லியுலியாங்கில் தனியார் சுரங்க நிறுவனத்தின் 5 மாடி கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் 2வது மாடியில் நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டிடத்தின் இதர பகுதிகளுக்கும் மள,மளவென பரவியது. தீயணைப்பு படையினர் மற்றும் நிவாரண குழுவினருடன் சென்று கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

The post சீன நிலக்கரி நிறுவனத்தில் தீ விபத்தில் 26 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China Coal Company ,Beijing ,China ,Shaanxi Province Lishi ,Dinakaran ,
× RELATED சீனாவின் சர்வதேச திட்டத்தில் சேர பிரேசில் மறுப்பு