×

சிறுவன் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டவர் ஜெகன்மூர்த்தி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் : காவல்துறை

சென்னை : புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. சிறுவன் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து முன்ஜாமின் கோரி ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..

காவல்துறை தரப்பு :சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஜெகன்மூர்த்தியை கைதுசெய்து விசாரிக்க வேண்டும். போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார். போலீஸ் வாகனம் வழங்கியதை ஏடிஜிபி தனது வாக்குமூலத்தில் மறுக்கவில்லை.

பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு : இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன்.

ஐகோர்ட் நீதிபதி : கடத்தப்பட்ட சிறுவன் 3 மணி நேரத்தில் ஏன் மீண்டும் விடுவிக்கப்பட்டார் என விசாரணை செய்யப்பட்டதா?

காவல்துறை தரப்பு : வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாததால் சிறுவனை ஏடிஜிபி விட்டு சென்றுள்ளார். சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை. எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டவர் ஜெகன்மூர்த்தி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் : காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Jeganmurthy ,Chennai ,ICourt ,Revolution Bharat Party ,Pooai Jeganmurthi Munjam ,Munjamin Kori Jeganmurthi ,Jekanmurthi ,Dinakaran ,
× RELATED மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித்...