×

முதலமைச்சர் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்” 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் -தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka District Secretaries ,Chief Minister ,Chennai ,Mu. K. ,Secretary General ,Duraimurugan ,Stalin ,President of the Association ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...