×

வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு : நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


டெல்லி : வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகளை முந்திவிட்டது என்ற நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தொலைநோக்கு சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால், வறுமையை ஒழிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் வறுமை குறியீடு 2.20 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது பல வளர்ந்த நாடுகளைவிட குறைவாக உள்ளது என்றும் இந்த பட்டியலில் வறுமை குறியீடு இத்தாலியில் 2.39% ஆகவும் ஸ்வீடன் நாட்டில் 2.42% ஆகவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதே போல், ஸ்பெயின் – 3.46%, லக்சம்பர்க் – 4.19%,பிரேசில் – 4.29%, அயர்லாந்து – 15.06 ஆகிய நாடுகளின் வறுமை குறியீடு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களே தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு குறைந்ததற்கு முக்கிய காரணம் ஆக கருதப்படுகிறது. குறிப்பாக உலகளாவிய பொது விநியோகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மதிய உணவு திட்டம்,பொது சுகாதாரம் மற்றும் கல்வி,நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துதல் என வலுவான சமூக உள்கட்டமைப்பு செயல்படுத்தி வருவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கையை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், அதிசயம் அல்ல.நுணுக்கமான, மக்களை முதன்மைப்படுத்தும் நிர்வாகம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு : நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA K. Stalin ,Delhi ,Chief Minister MLA MLA ,K. Stalin ,Principal ,M.U. K. ,Stalin ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...