×

டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைக்கிறார்: 11ம் தேதி சேலத்துக்கு பயணம்

சேலம்: கலைஞர் சிலை திறப்பு மற்றும் நூற்றாண்டு விழா ெதாடக்க விழா, மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி சேலம் செல்கிறார். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 11ம் தேதி சேலம் மாநகருக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையைத் திறந்து வைப்பதுடன், அவரது நூற்றாண்டு விழாவை சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, மறுநாள் 12ம் தேதியன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

இதற்காக முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கிடுவோம். இதுதொடர்பாக ஆலோசிக்க வரும் 30ம் தேதி, காலை 10 மணிக்கு சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழகச் செயல் வீரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைக்கிறார்: 11ம் தேதி சேலத்துக்கு பயணம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mattur Dam ,Salem ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...