×

சூப்பர் யுனைடெட் செஸ் குகேஷிடம் 2வது முறை குட்டு வாங்கிய கார்ல்சன்

ஜாக்ரப்: குரோஷியாவில் நடந்த, சூப்பர் யுனைடெட் குரோஷியா ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் மீண்டும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் நார்வேயில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த கார்ல்சன், யாரும் எதிர்பாராத விதமாக செய்த சிறு தவறால், குகேஷிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருந்தார். அதனால், மேசை மீது கையால் குத்தி தன் ஆத்திரத்தை கார்ல்சன் வெளிப்படுத்தியது, செஸ் ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், குரோஷியாவின் ஜாக்ரப் நகரில் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ரேபிட் செஸ் போட்டியின் 6வது சுற்றில், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனும், தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியனுமான குகேஷும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற குகேஷ், தன் ஆளுமையை மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.

இந்த டோர்னமென்டில் குகேஷ் தொடர்ச்சியாக பெறும் 5வது வெற்றி இது. இந்த போட்டிக்கு பின், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் கூறுகையில், ‘செஸ் உலகில் வெல்ல முடியாத ஆற்றலாக கருதப்பட்ட கார்ல்சனின் ஆதிக்கம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இது, குகேஷிடம் அடைந்த 2வது தோல்வி மட்டும் அல்ல. குகேஷுக்கு கிடைத்த உறுதியாக தீர்க்கமான வெற்றி’ என்றார். முன்னதாக தமிழகத்ைத சேர்ந்த பிரக்ஞானந்தாவுடன் நடந்த 5வது சுற்றுப் போட்டியில் கார்ல்சன் டிரா செய்தார்.

The post சூப்பர் யுனைடெட் செஸ் குகேஷிடம் 2வது முறை குட்டு வாங்கிய கார்ல்சன் appeared first on Dinakaran.

Tags : Carlsen ,Kukesh ,Super United Chess ,Zagreb ,India ,Magnus Carlsen ,Norway ,Super United Croatia ,Rapid ,Blitz Chess ,Croatia ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...