×

சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானம் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து நேற்று அதிகாலை 1.15 மணிக்கு வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 வருகை விமானங்கள், மற்றும் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என மொத்தம் 3 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்களில் பயணம் செய்வதற்காக நேற்று குறைந்த அளவு பயணிகளே முன்பதிவு செய்து இருந்ததால், 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மாற்று விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Indigo Airlines ,Dubai ,Delhi ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...