×

தீபாவளி பட்டாசுக் குப்பைகளை துரிதமாக அகற்றியதால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை :ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் நள்ளிரவில் கொட்டும் மழையிலும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.வெள்ளநீர் தேங்காத வகையில் புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டார். மழைநீர் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ராதாகிருஷ்ணன் அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்ய உள்ள மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , “தீபாவளி பட்டாசுக் குப்பைகளை துரிதமாக அகற்றியதால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம்.சென்னையில் மின்கம்பம், தண்ணீர் தேக்கம் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்கள் சாலைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்,”என்றார்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

வடகிழக்குப் பருவமழை அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை எதிரொலியால் 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாநில பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 என்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர்; மணிமுத்தாறு, கோவை புதூர், பழனி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.

புகார்கள் மீது உடனே நடவடிக்கை

மழை பாதிப்புகள் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், “மழைநீர் தேக்கம், மின் கம்பம், கழிவுநீர், மரங்கள் முறிவு உள்ளிட்ட புகார்கள் வருகின்றன.சென்னையில் மழையால் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 10 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. ரிப்பன் மாளிகை 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பட்டாசுக் குப்பைகளை துரிதமாக அகற்றியதால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை :ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali ,Radhakrishnan ,Municipal Commissioner ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...