×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு தக்காளி கிலோ ரூ.10 குறைந்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை ரூ.200 வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் கிராம் கணக்கில் வாங்கிய தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு தக்காளி கிலோ ரூ.10 குறைந்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரம் கிலோ ரூ. 30 வரையிலும் தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed market ,Chennai ,Chennai Coimpet ,Bengaluru ,
× RELATED கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு;...