×

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை நேரடி விமானம்: முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சவுதி அரேபியா ஜித்தாவுக்கு நேரடி விமான போக்குவரத்து சேவை, வாரத்தில் ஒரு விமானம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் (அக்டோபர் 2) சென்னை, ஜித்தா தளத்தில் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் வாரம் இரண்டு முறை நேரடி விமானங்களை இயக்குகிறது. திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இந்த நேரடி விமானம் புறப்படுகிறது. தமிழ்நாட்டு பயணிகளுக்கு இந்த விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும். ஜித்தா விமான நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்து அடையும்.

பின்னர் சென்னையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 11:15 மணிக்கு ஜித்தா விமான நிலையம் சென்றடைகிறது. முன்னதாக வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 முறை விமானம் இயக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு முறை கடிதங்கள் எழுதினார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை, இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக உரிய முயற்சி செய்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை நேரடி விமானம்: முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jeddah ,Haj Association of India ,CM ,President ,Abu Bakr ,Hajj Association of India ,Jeddah, Saudi Arabia ,Chennai, Jeddah ,Indian Haj Association ,
× RELATED துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...