×

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் இது வெறும் புரளி என தெரியவந்தது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீசை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது; பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட இயலாது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை விரைவில் கைது செய்து விடுவோம். இது போன்ற வெடி குண்டு மிரட்டல்கள் தொடர்பான தகவல்கள் வந்தால் பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை. சென்னை பெருநகர காவல்துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது இவ்வாறு கூறினார்.

The post பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது: காவல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Chennai Municipal Police Commissioner ,
× RELATED பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர்...