×

சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: 2 நாட்களுக்கு 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் அலெர்ட்..!!

சென்னை: சென்னை நகரில் 2 நாட்களுக்கு 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டாத சூழலில், சென்னை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை உள்ளிட்ட இடங்களில் சதமடித்தது.

இந்நிலையில், சென்னையில் 2 நாட்களுக்கு 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் இயல்பை விட வெயில் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்:

சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. நிலத்தை நோக்கி கடல் காற்று வீசுவது தாமதமாகி வருவதால் அனல் அதிகமாக உள்ளது. 2017-ம் ஆண்டு சென்னையில் வெயில் 107 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்திய நிலையில் இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் சென்னையில் தற்போது 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடும் வெயிலை பொறுக்க முடியாமல் மக்கள் ஜூஸ் மற்றும் பழக்கடைகளை நோக்கி படையெடுத்து வருவதால், குளிர்பானம் மற்றும் பழக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

The post சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: 2 நாட்களுக்கு 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் அலெர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...