×

சென்னையில் 12 இடங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்புப் படை, சென்னையில் உள்ள 12 இடங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தனியார் கட்டிடங்களின் தகவல்களை என்எஸ்ஜியிடம் பகிர்ந்துகொள்ளுவதற்காக அதிகாரிகள் தகவலை சேகரித்து வருகின்றனர். தமிழ்நாடு கமாண்டோ படையின் ஆதரவுடன் என்எஸ்ஜியின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிகள் சென்னையில் ரிப்பன் கட்டிடம் மற்றும் தலைமைச் செயலகம் போன்ற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பல பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஆபத்தாக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டுய நடவடிக்கைள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசு கட்டிடங்களான சென்னை துறைமுகம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இடங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படையின் பயிற்சிக்கான முன்னுரிமை அளிக்கின்றனர். அதுமட்டுமின்றி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் முதன்மையான இலக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய மெட்ரோ நிலையம் மட்டுமே போக்குவரத்துக்கான ஒரே மையமாகவும் அந்த பட்டியலில் உள்ளது. மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் இங்கு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

The post சென்னையில் 12 இடங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Security Forces ,National Security Force ,Union Ministry of Home Affairs ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...