×

சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் 3,167 பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவாரத்து கழகம் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் 3,167 பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாநகர போக்குவாரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில் வழியாக சுமார் 12 லட்சம் பேருக்கு மேல் பயணமாகி உள்ளனர். அரசு விடுமுறை நேற்று உடன் முடிந்ததால் இன்று முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பு பயணத்தை தொடங்கிவிட்டனர். மீண்டும் சென்னை திரும்பும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 15ம் தேதி வரை இயக்கப்படுகிறது. ஏற்கனவே அரசு பஸ்கள், ரயில்கள், ஆம்னி பஸ்களில் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில், நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

முன்பதிவு செய்யப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் நிரம்பிவிட்டது இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோவை, நாகர்கோவில், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,167 பேருந்துகளும், சென்னையை தவிர மற்ற இடங்களுக்கு 3,825 பேருந்துகளும் என மொத்தம் 6,992 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் பணிகள் மேற்கொள்ளும் இடத்திற்கு சிரமமின்றி செல்ல தமிழக அரசு சார்பில் மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் 3,167 பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவாரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Diwali festival ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...