×

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரம் 4 நாட்கள் இயக்கப்பட்டு வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண். 06067/06068 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்புகள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது

சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11,12,13,14,18,19,20,21 ஆகிய நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜூலை 11,12,13, 14,18,19,20,21 ஆகிய நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். கூட்டநெரிசலை தவிர்க்க எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. இந்த வந்தேபாரத் ரயில் எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, வழியாக நாகர்கோவில் சென்றடையும்.

 

The post சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Rampur ,Nagargo ,Chennai ,Southern Railway ,Vande Bharat ,Chennai Ulampur ,Dinakaran ,
× RELATED சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே...